Monday, December 28, 2009

Latest Vettaikaran Vijay special gallery

December 28th Monday


Vettikaran Vijay Movie Review

வேட்டைக்காரன் - வேட்டையாடுகிறான் நம்மை
நடிகர்கள்: விஜய் , அனுஷா மற்றும் பலர்
இசை:விஜய் ஆண்டனி
இயக்கம் : பாபு சிவன்
தயாரிப்பு:ஏவிஎம்
வெளியீடு :சன் பிக்சர்ஸ்

ரஜினி படத்திற்கு தான் இப்படி ஒரு ஓபனிங்கைப் பார்த்திருக்கிறேன். ரஜினியின் அடுத்த வாரிசாக தமிழ் ரசிகர்களால் அறியப்பட்டாலும், விஜய்யின் இந்த உயரம் நிஜமாகவே பிரமிக்க வைக்கிறது! தியேட்டருக்கு போகும்போது இன்னோரு தியேட்டரைக் கடக்க வேண்டி வந்தது. பத்து நிமிடம் ட்ராஃபிக் ஜாமாகுமளவு கூட்டம். தியேட்டரின் எல்லா பக்கங்களிலும் நீஈஈஈஈள நீஈஈஈஈள ஃப்ளக்ஸ் பேனர்கள். பேனர்களில், எஸ்.ஏ.சி, விஜய், சஞ்சய் என்று தலைமுறைகள்! ஹாட்ஸ் ஆஃப் டு யூ விஜய்!

தூத்துக்குடியில் வசிக்கும் 4 முறை எழுதி +2 பாஸ் செய்யும் ரவி என்கிற போலீஸ் ரவி , இவருடைய லட்சியமெல்லாம் இவரை இம்ப்ரஸ் செய்த தேவராஜ் ஐபிஎஸ் எனும் போலீஸ் அதிகாரியை போல் ஆக வேண்டும் என்று. மூச்சுக்கு முன்னூறு தடவை தேவராஜ் புகழ் பாடுகிறார் வீட்டுக்கு வெளியே 50 அடியில் கட்டவுட் வைக்கும் அளவுக்கு பற்று.ஊருக்குள்ள போலீஸ் முதல் எல்லோரையும் பின்னி பெடலெடுக்கிறார் அங்கே போடுகிறார் ஒரு பாட்டு நான் அடிச்சா தாங்க மாட்ட பாட்டின் ஓப்பனிங்கில் ஒரு பில்லரை கையால் பதம் பார்க்க கம்பியை மட்டும் விட்டு விட்டு பில்லர் பொல பொலவென உதறுகிறது.

நான் அடிச்சா தாங்கமட்டே


நான் அடிச்சா தாங்கமட்டேநாலு மாசம் துங்கமட்டே
மோதி பாரு வீடு போயி சேரமாட்டே

Vettaikaaran+CD+Scans+5 Vettaikaran Movie Review

ஒரு வழியாக 4 வது அட்டம்ப்டில் பாஸாகி தேவராஜ் படித்த கல்லூரியில் படிக்க சென்னை செல்கிறார். சென்னை செல்லும் வழியில் ரயில்வே ஸ்டேசனில் சுசிலாவை காண்கிறார் காதல் கொள்கிறார். சுசிலாவை மடக்க அவருடைய பாட்டிக்கு ப்ராக்கெட் போடுகிறார். சென்னை செல்லும் ரவி ஆட்டோ ஓட்டிக்கொண்டே படிப்பை தொடர்கிறார் அவருடைய ஆதர்ஷ நாயகன் தேவராஜ் போல.

செல்லானு ஒரு ரௌடி சென்னையை கைக்குள் வச்சிருக்கான் அவன் ஒரு பொண்ணை ஆசைப்பட்டால் அவளுடைய குடும்பத்திற்கு டார்ச்சர் கொடுத்து பொண்ணை அடைந்துவிடுவான். ஒரு சாம்பிளும் காட்டப்படுகிறது. விஜயின் வகுப்பு தோழியாக வரும் உமா(தீபிகா படுகோன் தங்கச்சி ஆனாலும் அட்ராக்சன் இல்லை). இவருடைய தந்தையின் டிராவல்ஸில் ஆட்டோ வாடகைக்கு ஓட்டுகிறார். செல்லா உமாவை ஆசைப்பட அதைக்கேட்டு பொங்கி எழும் விஜய் வில்லன் அன்கோவை துவம்சம் செய்கிறார் . செல்லா அடிவாங்கி ஓய்ந்தார் ஒரு வழியா படம் முடிஞ்சுச்சுனு பார்த்தா அங்க தான் வேட்டைக்காரன் ஆரம்பிக்கிருறார்.

போலீஸ் பலம் கொண்டு செல்லாவின் அப்பா வேதநாயகம் ரவியை என்கவுண்டரில் போட ரெடி செய்கிறார். என்கவுண்டரில் வழக்கம் போல தப்பிக்கும் ரவி அவரைப்போலவே வேதநாயகம் அன்கோவால் பாதிக்கப்பட்டிருக்கும் தேவராஜ் உடன் சேர்ந்து மானாவாரியா வில்லன் கோஷ்டிகளை பந்தாடுகிறார். சிட்டியை க்ளின் செய்கிறார்.எங்கோ கேட்ட இல்லை இல்லை பார்த்த கதை மாதிரி இருக்கா ம்ம்ம் கொஞ்சம் திருப்பாச்சி, போக்கிரி, வில்லு எல்லாம் கலந்த கலவை தான்.ஆதியையும் சேர்த்துக்கங்க.

படத்தில் குறிப்பிட தகுந்த அம்சம் அனுக்‌ஷா தான் செம பிகருங்க. நல்லா இருக்கார் பாட்டிற்கும் சில சீன்களுக்கும் வந்து போகிறார். படம் முழுக்க விஜயை சுத்தி நகருகிறது. நிறைய அறிமுகம் இல்லாத முகங்கள் என்பதால் விஜயை வளைத்து வளைத்து காமிரா காட்டியிருக்கிறது.

வில்லன் போலீஸா வரும் ஷாயாஷி சிண்டே பெருசா ஒன்னுமில்ல அங்க அங்க வரும் மனோபாலாவும் சிரிப்புக்கு உதவவில்லை. விஜய் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும் சத்யனும் சிரிக்க வைக்கவில்லை ஆனாலும் விஜய் அந்த வேலையை ஒழுங்கா செய்யுறாரு.

பாடல்கள் நல்லா இருக்கு கேக்கவும் பாக்கவும். ஆனாலும் பாடல்களில் ஆட்டம் குறைவு . பஞ்ச் டயலாக்குகளும் காணோம்.

படத்துல என்னை கவர்த்தவைகள் பல…

* வழக்கம் போல சூப்பர் டான்சு + சண்டை என விஜய் அசத்தியிருகாறு. பிரெஷ் ஆ இருகாரு படத்துல. வில்லுக்கு இந்த படம் ஓகே.
* அனுஷ்கா - முதல் பாதியில் பல காட்சிகளை முடிந்த அளவு நடித்து + பாடி இருக்கார். டான்சு தன் ஆட முடியாமல் நடந்தே வாராரு. பாடல்களில் எதோ மிஸ்ஸிங்.
* செல்லாவாக நடித்தவரின் நடிப்பு மிக அருமை. என்ன வில்லத்தனம். கண்கள் பேசுது.
* பாடல் கட்சிகள் மிக அருமை. பின்னணி இசை - சுமார். சில இடங்களில் ஸ்ரீசாத்தும் + சத்தியனும் சிரிக்க வைகிறார்கள்.
*

FINAL VERDICT : வேட்டைக்காரன் நம்மை வேட்டையாடுகிறான்.




No comments:

Post a Comment